உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம்.
நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது - நம் சமூகம்தான்!
இலக்கு மறந்த நம் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவானது ஒன்றுமில்லை, அந்தோ ஒரு இளைய தலைமுறையினர் வெறுமையை சுவாசிக்கின்றனர்!
கால ஓட்டத்தில் ஒதுங்கிய சருகுகளாய் நம் வரலாறு ஒதுக்கப்பட வேண்டாம். எதிர்கால சமூகத்தின் தேடல்களாய் பாதுகாக்கப்படட்டும்.
சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு நகர்த்துதலிலும் அர்ததம் இருக்கும். அதனால் தான் வெற்றியை எய்த முடிகின்றது. தோல்வி என்பது முயற்சியின் முடிவாக இருக்கட்டும்.
ஒரு உயரிய சமுதாய உருவாக்கத்தில் எனது பங்கும் கண்டிப்பாக இருக்கட்டும். நான் சாதித்தது எதுவாகவும் இருக்கலாம், ஆனால் என்னால் ஆற்றிய பங்கு எத்தனை சதவிகிதம்? என்பதே முக்கியம்.
கல்வி, ஆன்மீகம், கட்டுப்பாடு, ஒழுக்கம், இலக்கு மற்றும் முயற்சி ஒரு மனிதனின் அத்தியவசியத் தேவை!
என்னால் என் சமுதாயத்திற்காக தினமொரு பங்களிப்பை என்னால் செய்ய முடியும், இலட்சக்கணக்கில் ஒன்றும் எமது சமூகம் எம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை மாறாக சின்னச் சின்ன உதவிகளுக்காய் அவர்களது எதிர்காலம் வேண்டி நிற்கின்றது.
எம்மால் எமது எதிகால சமுதாயத்திற்காக செய்ய முடியுமான சில உதவிகள்:
தினமொரு துஆ (பிரார்த்தனை), சின்னச் சின்ன பொருளுதவி, நிலையான தர்மங்களில் பங்கு கொள்ளல், அறிந்த விடயங்களை பொருத்தமான முறையில் கற்றுக் கொடுத்தல், படித்த மாணவர்களுக்கு முகாமைத்துவப் பயற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், ஈமானிய வளர்ச்சிக்கான விடயங்களில் பங்கு கொள்ளல், பெண்களது ஹிஜாப் வளர்ச்சிக்கான முயற்சிகளில் கவணம் செலுத்துதல், தனிமனித உருவாக்கம் மற்றும் இஸ்லாமியக் குடும்ப உருவாக்கங்களில் ஈடுபடல்… போன்ற இன்னோரன்ன துறைகள் பரவிக் கிடக்கின்றன.
இவைகளில் நம்மால் முடியுமான குறைந்த பட்ச முயற்சியுடன் கூடிய பங்களிப்பு கண்டிப்பாக இருந்தாக வேண்டும். அதுவும் இஸ்லாமிய வரையறைகளுக்கு உற்பட்ட வகையில் இருப்பதையும் நாம் கவணத்திற் கொள்ள வேண்டும். மேற்கத்தேய நாடுகளில் அவர்களது சமூக மேம்பாட்டிற்கான மற்றும் முன்னேற்றத்திற்கான அனைத்து வகையான துறைகளிலும் நன்றாக திட்டமிட்டு செயற்படுகிறார்கள். ஆனால் வரையறை அற்ற செயற்பாடுகளால் அங்கு வளர்ச்சிக்கு ஏற்ப வீழ்ச்சியும் படு பயங்கரமாக தோற்றமெடுப்பதை அவர்களது நாட்டு நடப்புக்கள் எமக்கு தெறிவிக்கின்றன.
( قوله - صلى الله عليه وسلم -: (لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه
‘தனக்கு விரும்புகின்ற ஒன்றை தன் சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் ஒருவரும் (உண்மையான) விசுவாசியாக மாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளமை, நாம் மேலே கூறிய விடயங்களை மேலும் அழுத்தம் தருவதாக் தெறிகின்றது.
ஒரு சீரிய இஸ்லாமிய சமூக வளர்ச்சிக்கு முடியுமான பங்களிப்பை நல்கியவர்களில் நம்மையும் வல்ல றஹ்மான் ஆக்கியருளட்டுமாக!
thanks to; suvanthendral
No comments:
Post a Comment