أَللَّهُمَّ إِنَّا نَسْـأَلُكَ مُـوْجِبَاتِ رَحْمَـتِكَ وَعَزَائِمَ مَغْفِـرَتِكَ وَالسَّـلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالْفَوْزَ بِالْجَنَّةِ وَالنَّجَاةَ مِنَ النَّارِ
பொருள்: யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும் உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பையும் அனைத்து நல்லறங்களின் பிறதி பலன்களையும் சொர்க்கத்தைப் பெற்று வெற்றி பெறவும் நரகை விட்டும் ஈடேற்றம் பெறவும் (அருள்புரியுமாறு) நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.
ஆதார நூல்: ஹாகீம்
أَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِيْ، أَنْتَ الْحَيُّ الَّذِيْ لاَ يَمُوْتُ، وَالْجِنُّ وَاْلإِنْسُ يَمُوْتُوْنَ பொருள்: யாஅல்லாஹ்! நான் உனக்கே கட்டுப்பட்டேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன் மீதே உறுதி கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன்னிடமே முறையிடுகிறேன். யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறுயாருமில்லை. உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன், என்னை நீ வழிதவறச் செய்யாதிருப்பாயாக! நீயே மரணிக்காத நித்திய ஜீவன். மனித, ஜின் இனத்தினர் மரணித்து விடுவர்.
ஆதார நூற்கள் : புகாரி, முஸ்லிம்.
أَللَّهُرْزُقْنِيْ مَّ اغْفِرْلِيْ، وَارْحَمْنِيْ، وَاهْدِنِيْ، وَعَافِنِيْ، وَا
பொருள்: யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக! கிருபை செய்வாயாக! நேர்வழி காட்டுவாயாக! சுகமளிப்பாயாக! உணவளிப்பாயாக!
أَللَّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمًا كَثِيْرًا،وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفـِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நானே மிக அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறு எவராலும் எனது பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் பேரருளால் என்னை மன்னித்து, கிருபையும் செய்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.
ஆதார நூற்கள் : முஸ்லிம், புகாரி.
للَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَللَّهُمَّ اغْفِرْ لِيْ هَزْلِيْ وَجِدِّيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ
பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்த தவறுகளையும் என்னுடைய செயல்களில் நான் வரம்பு மீறியதையும் நீ மன்னித்தருள்வாயாக! இவைகளைப் பற்றி என்னைவிட நீயே நன்கறிந்தவன். யாஅல்லாஹ்! நான் விளையாட்டாகவோ, வேண்டுமென்றோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளையும் மேலும் என்னிடம் நிகழ்ந்த அனைத்து -பாவங்களையும்- மன்னித்தருள்வாயாக!
ஆதார நூல் : புகாரி.
أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنَ الْجُبْنِ،وَأَعـُوْذُ بِكَ مِنَ الْبُخْـلِ، وَأَعُـوْذُبِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ الْقَبْرِ
பொருள்: யாஅல்லாஹ்! கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமைவரை என்னுடைய ஆயுட்காலம் நீடித்தல், உலகசோதனை, கப்ரின் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூல் : புகாரி.
أَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُوْلُ بِهِ بَيْنَـنَا وَبَيْنَ مَعَاصِيْكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِيْنِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، أَللَّهُمَّ مَتِّعْنَا بِأَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُوَّاتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَاناَ، وَلاَتَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنـِنَا، وَلاَتَجْعَلِ الدُّنْيَـعِلْمِنَا، وَلاَتُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَّيَرْحَمُنَا
ا أَكْبَـرَ هَمِّنَا وَلاَمَبْـلَغَ
பொருள்: யாஅல்லாஹ்! உனக்கு மாறுசெய்வதை விட்டும் எங்களை தடுக்கக் கூடிய (உன்னைப் பற்றிய) அச்சத்தையும் உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத்தரும் வழிபாட்டையும் உலக சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தருவாயாக! இறைவா! எங்களுடைய செவிப் புலன்களையும் பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழவைக்கும்வரை (குறையின்றி) இயங்கச் செய்வாயாக! அதனை எங்கள் வாரிசுகளுக்கும் ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள் மீது விரோதம் கொண்டவர்களுக்கு பாதகமாக எங்களுக்கு நீ உதவிசெய்வாயாக! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்தாதிருப்பாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்காதிருப்பாயாக! எங்கள் மீது இரக்கம் காட்டாதவரை எங்கள் பொருப்பாளியாக ஆக்காதிருப்பாயாக!
ஆதார நூல் : திர்மிதி
أَللَّهُمَّ احْفَظْنِيْ بِاْلإِسْلاَمِ قَائِمًا، وَاحْفَظْنِيْ بِاْلإِسْلاَمِ قَاعِدًا،وَاحْفَظْنِيْ بِاْلإِسْـلاَمِ رَاقِـدًا وَلاَ تُشْمِتْ بِيْ عَـدُوًّا وَلاَ حَاسِدًا، أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ
பொருள்: யாஅல்லாஹ்! நான் நிற்கும்போதும் உட்காரும் போதும் படுக்கும் போதும் இஸ்லாத்தைப் பேணி நடப்பவனாக என்னை நீ ஆக்குவாயாக! மேலும் என்னை விரோதி மற்றும் பொறாமைக்காரனின் பரிகாசத்திற்கு ஆட்படுத்தா திருப்பாயாக! யாஅல்லாஹ்! உன்னிடமுள்ள அனைத்து நல்ல பொக்கிஷங்களிலிருந்தும் (எனக்கு தருமாறு) நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன்னிடமுள்ள அனைத்து தீய பொக்கிஷங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதார நூல் : ஹாகிம்
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمالَمْ أَعْلَمْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْـدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا إسْتَعَاذَ بِكَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَامِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْـتَـهُ لِيْ خَيْرًا .
பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து தீமைகளை விட்டும் இவ்லகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்டைய அடியாரும்; நபியுமாகிய (முஹம்மது-ஸல்-) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய (முஹம்மது-ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் (ஏற்பாடுகளையும்) எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.
ஆதார நூல்கள்: அஹ்மத், ஹாகிம்
أَللَّهُمَّ إِنِّيْ أَسْـأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ،وَتَرْكَ الْمُنْكَرَاتِ،وَحُبَّ الْمَسَاكِيْنِ،وَأَنْ تَغْفِرَ لِيْ وَتَرْحَمَنِيْ، وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِيْ غَيْرَ مَفْتُوْنٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ،وَحُبَّ مَنْ يُّحِبُّك،وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُـنِيْ إِلَىحُبِّكَ.
பொருள்: யாஅல்லாஹ்! நான் நல்லறங்களை செய்ய, தீமைகளை விட்டுவிட, ஏழை களை நேசிக்க அருள்புரியுமாறும், என்னை நீ மன்னித்து, கிருபை செய்யுமாறும், நீ ஏதேனும் ஒரு சமூகத்தினரை சோதிக்க நினைத்தால் அச்சோதனைக் குள்ளாக்கப்படாதவனாக என் உயிரைக் கைப்பற்றி விடுமாறும் உன்னிடம் கேட்கிறேன். உனது நேசத்தையும் நீ நேசிப்போரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் செயல்களை நேசிப்பதையும் உன்னிடம் கேட்கிறேன்.
ஆதாரம்: திர்மிதி, அஹ்மத்
No comments:
Post a Comment