ஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்
அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
அல்லாஹ்வின் அருளைப்பெற சிந்திப்பீர் செயல்படுவீர்
இன்று வியாழக்கிழமை (20.8.2009) 1430 ஷஃபான் 28 வது திகதியா? அல்லது 1430 ஷஃபான் 29 வது திகதியா?
கணக்கை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர்கள் இன்று 28 ம் திகதியில் இருக்கிறோமா? அல்லது 29 ம் திகதியில் இருக்கிறோமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் 1430 ரஜப் மாதம் எப்படி முடிவடைந்தது என்பதை பற்றி அறியாத நிலையிலேயே ஷஃபான் மாதத்தை அடைந்தார்கள்.
அவர்களின் சிந்தனைக்கு ஒரு சில விபரங்கள்
வருடத்தில் குறைந்தது இரண்டு சூரிய கிரகணங்களும், சந்திர கிரகணங்களும் நடைபெறுவதை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறார்கள்.
1430 ரஜப் மாதம் புதன்கிழமையுடன் (22.07.2009) அன்றுடன் 30 நாட்களை நிறைவு செய்து முடிவடைந்தது.
அன்றுதான் ரஜப் மாதம் முடிவடைந்தது என்பதற்கு அத்தாட்சியாக அன்று சூரிய கிரகணம் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். சூரிய கிரகணம் மாதத்தின் கடைசி தினத்தில் தான் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அதை தொடர்ந்து 1430 ஷஃபான் மாதம் (23.07.2009) வியாழக்கிழமை துவங்கியது. இதே ஷஃபான் மாதத்தின் வியாழன்கிழமை 15வது (06.8.2009) நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதிலிருந்து நாம் தெளிவாக ஒரு விஷயத்தை புரியலாம்.
சந்திர கிரகணம் பெளர்ணமி (FULL MOON DAY) தினத்தில் தான் எற்படும். அது 15 வது தினத்ததில் ஏற்பட்டதனால் அன்றைய தினத்தில் இருந்து 1430 ஷஃபான் மாதம் முடிவடைய 14 நாட்களோ அல்லது 15 நாட்களோ தான் இருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகில் அதுவும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் இன்று ஷஃபான் 28 என உள்ளது. இதிலிருந்தே அந்த நாட்காட்டியும், அதை பின்பற்றி ஷஃபான் 29 நாளை தீர்மானிப்பவர்கள் அனைவரும் தவறான திகதியை பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
மேலும் 1430 வியாழக்கிழமை (20.08.2009) ஷஃபான் 29 வது நாள் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பித்து விட்டதை அறிவியல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து விட்டது. அதை அனைத்து அறிவியலாளர்களும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்.
எனவே திருக்குர்ஆனின் 10:5 வது வசனத்தின் அடிப்படையில் பல வருடங்களின் கணக்கை அறிய முழு வாய்ப்பையும் அல்லாஹ் நமக்கு இன்று ஏற்படுத்தி தந்துவிட்டான். எனவே நாளை வெள்ளிக்கிழமை 1430 வருடத்தின் ரமளான் மாதத்தின் முதல் நாள் (21.08.2009)என்பது சந்தேகதத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.
ஆகவே விருப்பு வெருப்பின்றி அல்லாஹ்வின் அருளை பெறவதற்காகவே மட்டும் நாம் நாளை வெள்ளிக்கிழமை நோன்புடன் ரமளான் மாதத்தை ஆரம்பிப்போம்
No comments:
Post a Comment